ஃபகத் பாசிலின் `பொகெயின்வில்லா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு| Fahadh Faasil's ``Bougainvillea'' release date announcement
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார். மலையாளத்தில் மமூட்டி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஷ்மா பர்வம் திரைப்படத்தை அமல் நீரட் இயக்கினார்.இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
